புதுமை முகநூல் நண்பர்கள் பக்கம்
புதுமையது முகநூலில் புகுத்திடலாம் புதுமையினை
அதுவன்றோ நம்முகநூல் ஆக்கத்தில் நண்பர்கள் .
எதுவந்த போதினிலும் எத்திக்கும் நண்பர்கள் .
இதுவன்றோ புதுமைகளாய் இனிதானப் பக்கங்கள் .
பலர்போற்ற உலகெங்கும் பகிரவுமே செய்கின்ற
மலர்போன்ற செங்கரத்தால் மனதாரச் சான்றிதழ்கள்
சிலர்செய்யும் நன்னெறிகள் சித்திரமாய் நின்றுவிடும் .
உலகோர்க்கு இதுவன்றோ உவப்பில்லா பக்கங்கள் .
புகுத்திடுவோம் புதுமைகளைப் புத்துணர்வு மக்களிடம்
வகுத்திடலாம் வாழ்வுமுறை வந்திடுமே நல்வாழ்வு .
பகுத்திடலாம் தரமாகப் பல்லோரும் பயன்பெறவே .
மிகுத்திடுவோம் புதுமைகளால் மிளிர்ந்திடுமே வாழ்வுமுறை .
முகநூலில் சிறப்பென்றால் முத்தாய்ப்பாய்ப் புதுமைவரும் .
அகமலர்ந்து சொல்லுகின்றேன் அனைவருமே ஏற்றிடுவீர் .
முகமலர்ந்து வனைகின்ற முத்தானப் பாடல்கள்
சகமனைத்தும் நின்றிடுமே சகலமுமே புதுமையன்றோ .
கண்ணிலுள்ள காட்சியெல்லாம் கருத்தான வார்த்தைகளால்
மண்ணிலுள்ள மகத்துவத்தை மனங்குளிர எடுத்துரைக்கும் .
நண்பர்கள் பக்கமிது நல்லுலகம் செப்பிடுமே .
விண்ணிலுள்ள திங்களுமே வியப்பாகப் புன்னகைக்கும் .
பக்கங்கள் தினந்தோறும் பக்குவமாய் தருகின்றார்
திக்கெல்லாம் எங்கெங்கும் திவ்வியமாய் நின்றிடுமே .
சிக்கல்கள் நீக்கிவிடும் சிறப்பான தமிழ்மரபில்
பக்கங்கள் பகிர்ந்திடுவோம் பலருக்கும் பலன்கிட்ட .
ஆக்கங்கள் பலதருமாம் அன்பான புதுமையிலே
ஊக்கங்கள் பரிசில்கள் உணர்வானப் போட்டிகளும்
ஏக்கங்கள் இன்றியுமே எத்திசையும் நண்பர்கள்
வாக்குகளும் தந்திடுவோம் வகையான வளந்தருமே .
மனமுவந்து சொல்லுகின்றேன் மங்காதப் பாடல்கள்
தினமுவந்து வனைந்திடுங்கள் தித்திக்கும் புதுமையுமே .
மனதார வாழ்த்துகின்ற மங்களத்தின் முகநூலாய்க்
கனவினிலும் ஈங்கிதனைக் கைக்கொள்வீர் நண்பர்காள் !!