இயற்கையை காப்போம்

கடவுள் படைத்த உலகம் - அதை
காப்பதற்கே நாம் பிறந்தோம்
இறைவன் படைத்த உன்னதத்தை
உயிர்பிக்கவே நாம் வளர்ந்தோம்....
உணவே மருந்தாய் அமைந்த
காலம் போய் ...
இன்று பலருக்கு
மருந்தே உணவாகி போனது....
விலைமதிப்பிலா இயற்கையை
சிதைத்ததால் ...
இன்று
விலைகொடுத்து நோயினை வாங்கிவந்தோம்...
காற்றினை மறைத்து விட்டு
'ஏர் கூலரை ' தேடினோம்....
காய்கறியை மறந்துவிட்டு
'சான்விட்ஜை ' நாடினோம்....
நவீனம் என்னும் பெயரிட்டு
நாகரீக உலகம் படைக்க
கலியுக பிரம்மாக்களாய்
நாம் அவதரிக்க ....
சிதையிலிட்டது இயற்கையை தானே...?
மனிதனின் பிணி தீர்க்கும் இயற்கை
இன்றோ ....
இயற்கையும் பிணி கொண்டதே ...
தீர்ப்பது யாரோ....?
இயற்கை பாதைனை அழித்தவிட்டு
இங்கே ...
செயற்கை சாலையை செப்பனிட்டோம்....
அழிவினை நோக்கிய பாதை....
இயந்திரங்களின் இரைச்சலுக்கு
பழகிவிட்ட நம் செவிகள்
அழிந்து வரும் இயற்கையின்
அவல ஓசைக்கும் சற்று செவிசாய்தாலே போதுமே ...
நாம் அனுபவித்த இயற்கையை
நம் சந்ததிக்காக(ண)வும் விட்டுச்செல்லலாமே....!
- கீதா பரமன்