இயற்கையில்

நேசம்தரும் மலர்களே - உங்கள்
தோட்டத்தில் வேலிகள் உண்டு
திசையறியா காற்றும் வந்தது - வாசமது
வேலிகள் எல்லாம் தாண்டுதே

வானில் மாறாமல் வலம் - ஒளிகள்
ஒளிர்வதே உந்தன் உன்னதம்
ஏனோ மேகத்தில், பகலில் - வீண்மீன்கள்
கண்ணில் காணாமல் மறையும்

- செல்வா
பி.கு: - நொண்டி சிந்து வகையில் எழுதியது

எழுதியவர் : செல்வா (28-Feb-16, 3:19 am)
Tanglish : iyarkkaiyil
பார்வை : 369

மேலே