மழையின் தாலாட்டு

மழை.. மழை...மழை....!
எங்கும் மழை பொழிகிறது
மகிழ்ச்சியுடன் குழந்தைகள் நாங்கள்
மழை நீரிலும், குட்டைகளிலும்
ஓடி ஆடி பட்டாம் பூச்சிகளைத்
துரத்துகிறோம்;
எங்கும் மழை பொழிகிறது
அழகிய மலர்களின் கண் கவர் காட்சி
நீரில் ஓடும்போது எழும் சலக். சலக்.. ஒலி
நெஞ்சில் கதகதப்பை உணர்கிறேன்
அந்த மழை, அந்த இரவு
மழையின் தாலாட்டு;
எங்கும் மழை பொழிகிறது
மகிழ்ச்சியுடன் குழந்தைகள் நாங்கள்,
பட்டாம் பூச்சிகளும்
நெஞ்சின் கதகதப்பும்
மழையின் தாலாட்டும்
இனிமை! என்றும் இனிமை!