கல்விக் கொள்ளை - கற்குவேல் பா
அரசு பள்ளிகள் ,
அரசு மதுபானக்கடைகளாக
தரம் உயர்த்தப்படும் !
சத்துணவு முட்டைகள் ,
வங்கிக் கணக்கில்
வரவு வைக்கப்படும் !
கல்விமுறைகள் யாவும் ,
தனியாருக்கு
தாரை வார்க்கப்படும் !
எச்சாதியினருக்கும்
கல்வி போய் சேரும் ,
பணமிருப்பின் !
மகன் எஸ்எஸ்எல்சி
முடிப்பதற்கே - தந்தை
வீஆர்எஸ் வாங்க நேரிடும் !
தங்கம் இறக்குமதி ,
சதவிகிதத்தில்
பூஜ்யமாக குறையும் !
நகை விற்று பள்ளி ,
வீடு விற்று கல்லூரி என
வீதிக்கு வரக்கூடும் !
வரதட்சணையாக
முதுநிலை பட்டயம் ,
கேற்கக்கூடும் !
பணக்காரர்கள் பட்டியலில் ,
முதல் நூறு இடங்களில் ,
கல்வி நிலைய
உரிமையாளர்கள் இருப்பர் !
கல்லூரி தற்கொலைகள் ,
கணக்கில் எடுத்துக்கொள்ள
மறுக்கப்படும் !
டாட்டாவும் பிர்லாவும்
பிற தொழில்களை விடுத்து ,
கல்வி நிறுவனங்களை
ஊரெங்கும் நிறுவுவர் !
விற்பனை பட்டியலில் ,
கல்வி உயரிடத்திலிருக்கும் ;
நடுத்தரங்களுக்கு ,
எட்டாக்கனியாகும் !
சரஸ்வதியின் ஓலம் ,
கல்வி நிறுவன கதவுகளில்
முட்டி விழும் !
புத்தகத் திருடர்கள்
அறிவுப் பசியோடு - இரவில்
ஊலா வருவார்கள் !
நூலகங்களுக்கு ,
காவலர்கள் பாதுகாப்பு
போடப்படும் !
கல்வி வேண்டி
போரிடுவோர் - தீவிரவாதிகளாக
கருதப்படுவர் !
மூன்றாம் உலகப்போருக்கு ,
உலகநாடுகள் தயாராகும் - அதற்கு
கல்வி அடிப்படையாகும் !
- பா . கற்குவேல்