காதல் கண்கள்

சிகரமாய் உன் தோற்றம் - அதில்
வைரமாய் மின்னும் கண்கள்

அருமையாய் எனை நோக்கும்
அருவியாய் வந்து தாக்கும்

விழிகள் நான்கும் இணைந்து
வித்தைகள் பல புரிந்து

கற்பனை கதவு திறக்கும்
கனவுகள் பல உதிக்கும்

கல்லும் கரையும் பார்வை -அது
கண்கள் புனையும் கவிதை

உள்ளம் உருகும் பாவை - நான்
உன்னுள் உறையும் பேதை

உன்னைக் கண்ட பொழுது-நீ என்
உயிரில் கலந்த உறவு.

எழுதியவர் : theanmozhi (29-Feb-16, 10:07 am)
Tanglish : kaadhal kangal
பார்வை : 119

மேலே