இதுவும் கடந்து போகும்
படபடக்கும் பட்டாம் பூச்சியாய்
சிலுசிலுக்கும் சிற்றோடையாய்
திகட்டாத விளையாட்டுடன்
சின்னஞ் சிறுமியாய்
சுற்றி திரிந்தேன்
கடந்து போனது காலம் ...
அரும்புகள் மொட்டவிழ
ஆசை கனவுகள் ஆயிரம்
அடிமனதில் கொட்டமிட
விடலை பருவத்தில்
ரகசிய சிரிப்போடு
உலா வந்தேன்....
கடந்து போனது காலம் ...
நட்பை தவிர வேறொன்றும் அறியாமல்
நட்பெனும் ஆணிவேரை
கிடைத்த இடமெல்லாம்
வேர் ஊன்றி
ஆலமரமாய் விழுதுகளோடு
விண்ணுயர நின்றிருந்தேன்...
கடந்து போனது காலம் ...
இன்று
சூழல் எனும் சிறையில்
மூச்சுவிடக் கூட தனிமையின்றி
என் வேர்கள் எல்லாம்
புரையோடி போயின
விழுதுகள் மட்டுமே என்னுள்
மனம் தாண்டாமல் உயிரில்
புதைந்து கிடக்கிறது
இதுவும் கடந்து போகும்
மழைத்துளி பட்டு
முளை விடும் விதை போல்
என் மூச்சு காற்றில்
முளைத்திருக்கும்
என் நட்பு
காலம் கடந்து போனாலும் கூட .............