அம்மா...
விந்தாக இருக்கும்போதே முந்தி வந்தவன் உன்னில் உருவாக வேண்டும் என்றே ....
இருந்தும் உன்மீது சிறுது வருத்தம்தான் இன்னும் ஒரு பத்து மாதம் சுமக்கவில்லையே என்று ....
என்னை வயிற்றில் சுமந்து முன்னூறு நாட்கள் தூக்கத்தை தொலைத்த தாயே நீ தூங்க இந்த பூக்கள் வெடிக்கும் சத்தத்தை சற்று நிறுத்தி வைப்பேன் ...
நீ வியர்வையில் நினைந்து பிசைந்து தந்த சாதம் இன்று பலநூறு செலவு செய்தும் கிடைக்க மறுக்கின்றது ...
உன்புடவை முந்தானை வாசம் எந்த வாசனை திரவியத்தில் செய்தது நான் விலை கொடுத்து வாங்க ....
எத்தனையோ கவிதை என் தொலைந்து போன காதலியை பற்றி என் கண் முன்னே இருக்கும் தேவதையே உனக்காய் ஒரு சின்ன படைப்பு ஏற்றுகொள் ....