தாய். (அம்மா )

அன்னைக்கு இணையாக
ஆண்டவனுண்டோ-அவள்
அன்புக்கு இணையாக
ஆனவருண்டோ
பெற்றவளே தெய்வமாக
இருப்பதினாலே - மற்ற
தெய்வம் ஓன்று நமக்கெல்லாம்
வேண்டுவதுண்டோ .

ஈரைந்து மாதங்கள்
இராப்பகலா விழித்திருந்து
பத்தியங்கள் பல நோம்பி
பத்திரமாய் பெற்றெடுத்தாள் !
பிள்ளை கூனாய் இருந்தாலும்
குருடாய் பிறந்தாலும்
முடமாய் இருந்தாலும்- மூளை
இல்லாதிருந்தாலும்
அரவணைத்தே மகிழ்ந்திடுவாள்
அவள் தானே தெய்வமிகு அன்னை .

தாய் என்ற சொல் இங்கே
வூனுருவம் உள்ளவைகள்
உயிரினங்கள் பயிரினங்கள்
அத்தனைக்கும் உண்டே !!
அன்பதனை செலுத்தி பிள்ளை
அணைப்பினிலே கனிந்துருகும்
தாயை தெய்வமன்றி வேறெப்படி
அழைப்பதுவோ.

வற்றா கடல் கூட வற்றினாலும்
வற்றிடலாம்
வானம் முழுவதையும் அளந்தாலும்
அளந்திடலாம்
பாவி புவியாவும் அழிந்தாலும்
அழிந்திடலாம்
அன்னையின் அன்பு மட்டும்
வற்றிடுமோ வரண்டிடுமோ
சொல் .

எழுதியவர் : (15-Jun-11, 8:42 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 324

மேலே