குழந்தை
களங்கம் காணா உள்ளம் 
விளங்கும் சிறு விழிதான்
சூதொன்றும் அறியாத சூத்திரம் 
 துலங்கும் மழலை மொழி 
வாய்த்திரன் இல்லாத
 வஞ்சனை செய்யாத 
தெய்வத்தின் அவதாரம் .
பொக்கை வாய் திறந்து 
புன்னகை செயுங்கால்
எக்கையும் தழுவிடவே 
தாவி வரும் , அக்குழந்தை 
அழுத மொழி யாரறிவார் 
தாய் என்ற தெய்வம் தவிர்த்து .
பொய்யுலகம் அறியாப்பிரம்மம்  
பொய்யர்களின் பித்தலாட்டம் 
உணராத உருவம் 
பாம்பின் வால்தொட்டிழுத்து 
விளையாடும் பருவம் 
குழந்தை பருவம்.
சிறு நரந்தை வாய் தெரிய 
மெல்லவே நகை செய்து 
மெது விரலால் கை கொட்டி 
ஆர்பரிக்கும் அழகோ தனி.
மென் பாதம் நோகாமல் 
மெல்லவே நடை பழகி 
எழுந்து விழும் அழா!!.
இறந்தவர்கள் சொர்கத்தை 
எய்திவிட்டார் என்றெல்லாம் 
சொல்லுவர் உலகரியார்-அச்
சொர்க்கம் இறந்தபின் இல்லையப்பா  
சிறு குழந்தை மழலையில் தான் 
உள்ளதப்பா ! உள்ளதப்பா!!.

