வாழும் கலை.
காலத்தை வீணாய் கழிக்காதே
பல கடமைகள் உண்டு நீ மறக்காதே
வாழ்க்கையை சுமையாய் நினைக்காதே
வருவது வரட்டும் மலைக்காதே.
எண்ணத்தை தட்டி எழுப்பிவிடு -அதன்
எல்லைவரை சென்று பார்த்துவிடு
தொல்லை இல்லா வாழ்க்கை சுவைக்காது
துன்பமும் இன்பமும் நிலைக்காது.
ஆசைகள் உன்னை அழித்துவிடும்
ஆணவம் உன்னை கெடுத்து விடும்
ஒழுக்கம் உன்னை உயர்த்திவிடும் -மன
ஊக்கம் கொண்டால் மதிப்பு வரும்.
தொல்லைகள் கொடுப்பதை மறந்து விடு-வரும்
தொல்லையை எதிர்க்க துணிந்து விடு
நல்லவை செய்திட நினைத்து விடு -பிறர்
நலம் பெற உனையே கொடுத்து விடு.