ஏன்?ஏன் ? ஏன் ?
நிலவே நீ காய்வது ஏனோ ?
நிம்மதி அற்றோர் வாழ்வில்
நிம்மதி வூட்டவா .
தென்றலே நீ தவழ்வது ஏனோ?
தேன் மலர் மணத்தை
தெருவில் பரப்பவா !
மலரே நீ மலர்வது ஏனோ ?
மங்கையர்வாழ்வை
உவமை காட்டவா .
ஞாயிறே நீ சுடுவது ஏனோ
நீதி அற்ற ஞாலம்
அழிகவே என்றா .
இரவே நீ இருள்வது ஏனோ
இருட்டில் தீமையை
விரைந்து வளர்க்கவா.
மழையே நீ பொழிவது ஏனோ
நல்லோர் பல பேர்
உண்டென்று எண்ணியா .
புயலே நீ பொங்குவது ஏனோ
பொறுமை காத்தது
போதுமென்று எண்ணியா .
மரமே நீ அசைவது ஏனோ
மனிதனை போல நான்
மடையன் இல்லை என்றா.
அலையே நீ அலைவது ஏனோ
வாழ்க்கையின் உவமை
நீ என்று காட்டவா .