காதலுக்கே முதல் மரியாதை

காதலுக்கே முதல் மரியாதைன்னு சொல்லிட்டு தன்னோட பெற்றோர் பாத்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு தன்னோட அலுவலகத்திலே வேலை பாக்கற அவனோட சம வயசுப் பொண்ணு காஞ்சனாவைக் காதலிச்சு பத்து வருசத்துக்கு முன்னாடி கல்யாண்ம் பண்ணிட்டானே நம்ம நந்த குமார் இப்ப எப்பிடி இருக்கறாண்டா?
@
அவனுக்கு பத்து வருசத்திலே மூணு பசங்க பொறாங்க.மூணும் அடக்கமுடியாத வாலுப் பசங்க. வீட்ல அந்தக் காஞ்சனா ஒரு வேலையும் செய்யறதில்ல. சமைக்கிறதிலிருந்து வீட்டைப் பெருக்கிக் கழுவி பாத்திரங்களைக் கழுவி துணி தொவச்சு தேச்சு வைக்கற எல்லா வேலையும் அவன் செய்யறதோட சமையல் ருசியா இல்லைன்னா மொத்தும் செம்மையாக் கெடைக்கது நந்த குமாருக்கு. பசங்க குறும்பத்தனம் பண்ணினாக் கூட நந்த குமாருக்குத்தாம் முதல் மொத்து பூரிக்கட்டையிலே.

@
பாவம்டா நந்த குமார். காதலுக்கு முதல் மரியாதை கொடுத்தவனுக்கு வீட்ல இப்ப தெனமும் முதல் மொத்து. நம்ம நந்த குமார் இப்ப நொந்த குமார் ஆகிட்டானே.

@
ஆமாண்டா நொந்த குமார் பாவம்டா

எழுதியவர் : மலர் (1-Mar-16, 12:14 am)
பார்வை : 184

சிறந்த நகைச்சுவைகள்

மேலே