வேகம் விவேகம்

கசங்கிய காகிதம்
எழுத்தை ஏற்க மறுப்பதில்லை...
இரவு வானம்
சூரியனை அழைக்க
மறப்பதில்லை...

வெண்பனி
மலையை உள்வாங்குவதில்
வலியில்லை...
சேறில்
தாமரை
வளர்வதில்
பிழையில்லை...

வேங்கை
மானை
துரத்துவதில்
தவறில்லை...
மனிதன்
மனிதனை
வதைப்பது
முறையில்லை...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Mar-16, 5:01 pm)
Tanglish : vegam விvegam
பார்வை : 322

மேலே