பயணத்தை தொடர்ந்திடு

இயற்கை தானே வாழ்க்கை
ஏற்றுக் கொள் மனமே...

சோகம்
என்பதை
தூக்கி சேற்றில் போடு!

கருப்பு வெள்ளை
கண் தான்
இங்கு வண்ணத்தை காட்டும்.....

வாழ்க்கை என்பது
மின்சாரம் போலே...
உன் மகிழ்ச்சி அத்தியாவசியம்...
சோகம் அதை
தூக்கி எறிந்திடு...

பள்ளம் என்று இருந்தால் தான்
உயரத்திற்கு மதிப்பு...
துன்பம் என்று
இருந்தால் தான்
இன்பத்திற்கு சிறப்பு...

நீர் என்றால்
ஓட வேண்டும்
கண்ணீர் என்றால்
காய வேண்டும்

தீட்ட தீட்ட தான்
வைரம்...
ஓட ஓட தான்
வண்டி...
எரிய எரிய தான்
தீபம்...
சுழல சுழல தான்
பூமி...


தவறின் குறியே
இங்கு
பெருக்கற் குறியானது...

இதில்
தவறுக்கு என்ன பெருமை...
இல்லை பெருக்கற்கு
என்ன சிறுமை...

நேரம் போலே இருந்துவிடு...
நிற்காமல் பயணப்படு...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Mar-16, 10:38 am)
பார்வை : 1072

சிறந்த கவிதைகள்

மேலே