பெண்மை

பெண்மை..... !!!
------------------------
தாயாய், மகளாய் , மனைவியாய, மாமியாராய ..... எத்தனை உருவங்கள் பெண்மைக்கு....
-------------------------

இரு கைகளிலும் குலுங்கும் வளையல்கள்
வளைகாப்பு முடிந்ததும் நெருங்கும் ஒருவித பயம்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இது ஒரு சகாப்தம்...

சிறு பெண்ணாய் இவள் வலம் வந்தாள்...
சிட்டுக்குருவி போல் ஆசையோடு பறந்தாள்
கிடு கிடு வென வளர்ந்தாள்...
மணப் பெண்ணாய் அமர்ந்தாள்..

வெட்கத்தில் தலை குனிந்தாள்,,
கருவை வயிற்றில் சுமந்தாள்
தாய் என ஆனாள்
பாசத்தை புரிந்தாள்...

மகனும் வளர்ந்தான்
மணமேடை நோக்கிச சென்றான்
மனைவி கைப பிடித்தான்
இவள் மாமியார் ஆனாள்..

பெண்ணாகி, தாரமாகி, தாயாகி இருந்தாள்..
மாமியார் ஆனதும்
கருணை உள்ளத்தோடு ஆணவம் தலை தூக்கியதோ?
என்ன இது மாயம்????
ஆனால் இவளும் பெண் தானே!!!

கண் இமை போல் உன் துணைவனை காத்தவள்....
கட்டு குலையாது குடும்பத்தை தாங்கியவள்..
கருணை வடிவாய் உறவினை அணைததவள்...
கம்பீரமாய் உனக்கு மாமியாரானாள்..

பெண் என்ற தெய்வமகள் குடி புகுந்தாள்
விளக்கேற்றி வைத்ததும் ஒளி புலர்ந்தது
எவரோ யாரோ ஏற்றினாலும் எரியும் விளக்கு
ஆனால் இவளோ குடும்ப குத்துவிளக்கு
நங்கை இவள் இருந்துவிட்டால் இருட்டும் வெளிச்சமாகும்
பசியோ பசி இவள் பாசத்தில் பறந்தோடும்
வீணாய் பேசி அவளை நோகடிக்காதே
மின்மினியாய் அவளை சுற்றவிடு.....

கண்ணீர் விடப் பிறந்தவள் இல்லை பெண்ணே நீ...!!
சாதனைகளைப் படைக்கப் போகிறாய்
நிமிர்ந்து நில்...

மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (2-Mar-16, 10:56 am)
Tanglish : penmai
பார்வை : 197

மேலே