உறவுகள்

மனிதர்களிலும் மறைந்திருக்கும்
சில பச்சோந்திகள்
செயலிற்கு நியாயம் சொல்லி
திசைமாறும் திமிங்கலங்கள்


இனிப்பது போல் பழகி
இரை கொத்தும் பாம்புகளாய்
மனதினை மழுங்கடிக்கும்
மாயலோக மனிதர்கள்


மாறுவதே மனிதம் என்று
வேசத்தினை மாற்றியமைத்து
மறைந்து போகும் மனிதர்களால்
மரத்துப்போகும் மானிடங்கள்


உயிரோடு உள்ளவரை
உன்னோடு இருப்பேன் என்று
உரக்கச் சொல்லியவர்கள்
உருமாறிப் போவார்கள்


சத்தியமாய் சொல்கிறேன்
சாகும் வரை நீதானென்று
நித்தமும் நெருங்கியவர்கள்
நிறம் மாறி போவார்கள்



அழகான குடிசையென்று
புகழாரம் செய்தவர்கள்
அயல் வீட்டு பல்கணியில்
காற்று வாங்கப் போவார்கள்


மாறுவது மனிதம் என்ற
காரணத்தை கற்றுத்தந்து
கலவரமற்ற கலைப்புகளில்
காணாமல் போவார்கள்


கலைந்து போகும் காக்கைகள்
மலிந்துபோன உலகம் என்ற
தத்துவத்தைக் கற்றுத்தந்து
திசை தொலைந்து போவார்கள்

எழுதியவர் : சர்மிலா (2-Mar-16, 11:10 am)
Tanglish : uravukal
பார்வை : 137

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே