பெண்ணுரிமை
பெண்ணுரிமை
பெண்கள் நாட்டின் கண்கள்
ஆணுக்கு பெண் சமம்
என்ற ஹோசங்கள் சில நூறு
கடந்து விட்டோம்
ஆனால் பல நிர்பயாவும் இசைப்ரியாவும்
வீழத்தானே செய்தார்கள்
பெண்ணை சதையும் தோலுமாய்
பார்க்கும் ஆண் சமூகம்
இன்றும் என் தாய் நாட்டில்
வாழத்தானே செய்கிறது
இவர்கள் தாயின் மேன்மையை
பெண்ணின் மென்மையை
அறியாத அற்ப பதர்கள்
பெண்ணே நீ
நாட்டை ஆண்டாளும்
வீட்டை ஆண்டாளும்
விண்வெளியில் பறந்தாலும்
இந்த முட்கள் முளைக்கத்தான் செய்யும்
அந்த முட்களை ஏணியாக்கி
கோபத்தை கருவியாக்கி
வெற்றியை உன் மாலையாக்கு
புவி மறையும் காலம் வரை
இந்த பதர்கள்
முளைத்து கொண்டே இருக்கும்
வீழாதே பெண்ணே விழித்தெழு
உன்னை சதையும் தோலுமாய் பார்பவருக்கு
மங்கம்மாவை இரு
உன்னை உடலும் உயிருமாய் பார்பவருக்கு
கண்ணகியாய் இரு
உன்னை எதிர்பவருக்கு
லக்ஷ்மி பாயாய் இரு
உன்னை கனிவுடன் பார்பவருக்கு
தெரசாவை இரு
உன்னை வீ ழ்த்த நினைபவர்க்கு
மேரி கோமாய் இரு
உன்னை வாழ்த்த நினைபவர்க்கு
உண்மையாய் இரு
ஆகமொத்தம்
பெண்ணே நீ
மென்மையின் உருவமாய்
கருணையின் சமுத்திரமாய்
பாசத்தின் வேராய்
நேர்மையின் அதிகாரமாய்
ஒழுகத்தின் சான்றாய்
ரௌதிரத்தின் கீற்றாய்
பெண்ணின் இல்லகனமாய் இரு.
-சுரேகா