எங்களின் அழுகுரல் உங்களின் காதினில் விழவில்லையா

ஆயிரம் ஆண்டுகள்
தான் உருண்டோடிப்போனாலும்
நெஞ்சம் மறவா நினைவலைகள் இவை.....
ஓராயிரம் உயிர்களை
பலி கொண்ட ஒரு
இன அழிப்பின் அவலக்குரல்...
உலகத்தோர் காதுகளில் கேட்க
மறந்த ஓலங்கள்....
எம்மவர் துயரங்கள் துடைக்க
மறுக்கப்பட்ட தருணங்களில்
குண்டுகள் வெடியோசை
சங்கீதம் மீட்ட....
கொலைவெறி தலைவிரித்தாடிய அந்த நாளில்
ரத்த வெள்ளத்தில்
நீந்திக் கிடக்கிறது நம்மவர் பிணங்கள்....
எங்கும் பிணக்குவியல்
ரத்தவெள்ளம் கொலைவெறி தீராத கொலைஞர்களின் வெறியாட்டம் நின்றபாடில்லை..
அதை ஏன் என்று கேட்கவும்
நாதியில்லை.....
இடர் பல கடந்து..
உயிர் பல துறந்து
மாண்டு மடிந்து கொண்டிருக்கும் ஓர் இனத்தின்
ஆத்ம கானம்...
உங்கள் காதுகளில்
கேட்கவே இல்லையா...??
நம்மவர் துயர் தீர வழியேதும் இல்லையா....??

எழுதியவர் : (4-Mar-16, 4:27 pm)
பார்வை : 86

மேலே