நேரம்_இது, தேர்தல் நேரம்,
இல்லாதவர் கையில் கூட
இருப்பிருக்கும் நேரம் இது...,
மதுபான கடைகள்
மாநாடு போடும் நேரம் இது...,
சுயநல சிங்கங்கள்
பசுந்தோல் போர்த்திவரும் நேரம் இது...,
வெள்ளை வேட்டி உடையெல்லாம்
அழுக்காகும் நேரம் இது...,
குளிரூட்டு அறையெல்லாம்
ஓய்வெடுக்கும் நேரம் இது...,
உருவற்ற சாலைகள்
உருவம் கொள்ளும் நேரம் இது...,
வீதி விளக்குகள்
வெளிச்சம் காட்டும் நேரம் இது...,
குற்றவாளி மனிதரெல்லாம்
கும்பிட்டால் பதவிகள் கிடைக்கும்
நேரம் இது...,
இலவசம் என்னும்
இன்பச் சாரல் அடிக்கும் நேரம் இது...,