தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்- 24

“மகரந்தப் பூக்கள் மலரட்டும் – தேனை
மனம்போல வண்டுகள் குடிக்கட்டும்
மலைகளில் சூரிய கதிர்கள் பரவட்டும்
மேகத்தின் மாயத் திரைகள் விலகட்டும்”

வாலிப பருவ காலத்தில்
காதலென்னும் காம நோய்
இரவும் பகலும் இருதயத்தில்
இடைவிடாமல் வலிக்கின்றது

சிட்டுக்குருவி லேகியத்தால்
பக்கவிளைவுக்கு அச்சமில்லை
துட்டுப்பிடுங்கும் உலகத்தில்
விளம்பர உத்திக்கு பஞ்சமில்லை…!

இல்லறமென்னும் நல்லறத்தில்
இணைந்து ஆற்றும் நற்பணியால்
செல்வச் செழிப்பு பதினாறும்
வாசல்தட்ட வழிவகுப்போம்..!

காலை விடியும் வரையினிலே
காதல் காமப்படகு விடுவதற்கு
மணஜோடிப் போடும் மலர்க்கணைகள்
மன்மத மழையாய் பொழிகின்றது….!

படுக்கை விட்டு எந்திரிக்க
விருப்பமின்றி மனம் தவிக்கின்றது
ரவிக்கைப் பிடித்து இழுத்தணைத்து
இறுக்க முத்தமிட்டு மகிழ்கின்றது…!

திருக்கை மீனாய் நீயடி
உன்னைத் துரத்தும் மானாய் நானடி
வெறுப்பு ஏதும் காட்டாமல்
என்னை பொறுத்துக் கொள்வாய் தினமடி..!

வெறுப்பு என்ன இருக்கிறது..?
ஆண் விருப்பம்தானே நடக்கிறது !
மறுப்புச் சொல்லி மறுதளித்தால்
மண வாழ்க்கைதானே கசக்கிறது !

எழுதியவர் : சாய்மாறன் (4-Mar-16, 7:56 pm)
பார்வை : 77

மேலே