சோகஜீவன்
இதயவீட்டில் இருந்து வந்த
மங்கை உருவம் மறைகிறது!
மங்கிபோன மனக்காட்டில் உயிர்
மயக்க நிலையில் இருக்கிறது!
தங்கிப்போன ஞாயபகமோ
தாவிச்செல்ல துடிக்கிறது!
தயங்கியிருந்த உடல் மட்டும்
தனியாய் இங்கு அழுகிறது!
சுகமாய் இருந்த நாள்களும்
சுமையாய் இங்கு ஆகுவதோ!
மடிமீது விழுந்த காதலும்
மரணம் சென்றால் ஞாயமோ?
உன்னை இங்கு நினைத்ததால்
உள் ளுணர்வு எரிகிறது!
எரிந்த விட்ட உணர்வுகளால்
என்னுள் கண்ணீர்துளிகள் பெருக்கிறது!
கண்ணீர் விழுந்த இடத்திலே
சோகமரங்கள் வளர்கிறது!
சோகமரத்தின் பூவாய்தான் இந்த
சோகஜீவன் மலர்கிறது!
பூத்துக்கொண்ட நொடிகளிலே
பறித்திக்கொண்டால் ஞாயமோ!
பறித்து நீயும் எரித்துவிட்டால்
பிஞ்சு மனது தாங்குமோ!
மரணம் எய்திய பின்னாலே
மரிப்பேன் என்று நினைத்தாயா?
மீண்டும் கருவிலேநுழைந்துவிட்டால்
மங்கிய காதலை ஏற்ப்பாயா??