பிணம் தின்னும் கழுகுகள்

ஓநாய்களும் வாழும் தேசம்
உன்னை நீயும் காத்துக்கொள் !
உள்ளத்திலே அழுக்கோடு
ஊர் சுற்றும் தெரு நாய்கள் !

வயதை பற்றி யோசிக்காத
வக்கிர புத்தி பேய்களாக !
வழிமேல் விழிவைத்து
வீதிதோறும் காத்துக்கிடக்கு !

பெண் என்ற வார்த்தை போதும்
போதையிலே வேட்டையாட !
பொழுதெல்லாம் காத்திருக்கும்
பிணம் தின்னும் கழுகுகள் !

சூரியனின் துணையின்றி
சுற்றுவதை நிறுத்திவிடு !
காவலர்கள் இருந்தபோதும்
கயவர்கள் மிகுதியன்றோ !

கண்ணியத்தை மறந்திடாதே
கர்ப்புக்கும் களங்கம் வரும் !
துணையின்றி போய்விட்டு
துக்கத்தை தேடாதே !

எழுதியவர் : hajamohinudeen (5-Mar-16, 5:25 pm)
பார்வை : 196

மேலே