சொல்ல தான் வேண்டுமா
என் அர்த்தமற்ற பேச்சுக்கள்
உன்னில் கோபத்தை ஏற்படுத்தலாம்
என் செய்வேன் நான்
எனது மறு தாயை உன்னிடம் கண்டேன்
குழந்தைகள் சிந்தித்து பேசுவதில்லை
அதன் உளறல்களை தாய் கோபத்தோடு பார்பதுமில்லை
நீயும் என் உளறலை சகித்து கொள்
பேச்சுக்களின் நடுவே சண்டைகள் எழலாம்
தொடர்ந்து பேசு
நிறுத்தாமல் சண்டையிடு
பொறுத்து பேசலாம் என தள்ளி நிற்காதே
தள்ளி நிற்பது பழகி விடலாம்
தூக்கத்தில் உன் பெயரை நான் பிதற்ற மாட்டேன்
கனவெல்லாம் நீ தான் என கதைக்க மாட்டேன்
என் உயிரே உன்னில் என உளற மாட்டேன்
ரசனை கெட்ட ஜென்மம் இவனென்று எண்ணி விடாதே
என் வாழ்வாய் நீ ஆனா பின்பு
வர்ணனைகள் தேவை இல்லையே அதை விளக்குவதற்கு
தலையணை நீ தேடும் முன்
என் மடி கொடுப்பேன்
கைக்குட்டை தேவை இல்லை
உன் கண்ணீர் துடைப்பேன்
துன்பத்தின் அர்த்தத்தை நீ மறந்தே போக
உன் வாழ்வின் இன்பமாய் நானே இருப்பேன்
செல்லமாய் நீ அடிக்கவும்
ஆசையோடு கில்லவும்
அளவின்றி கொஞ்சவும்
பொம்மைகள் வாங்கி தர மாட்டேன்
எனக்கான சந்தோசம் அது
அதை பொம்மைக்கு தர மாட்டேன்
சொல்லி கொண்டே போவேன் நான்
உன்னோடு வாழ நினைக்கும் வாழ்கையை
அனைத்தையும் நான் சொல்ல தான் வேண்டுமா
சொல்லாமல் செய்யும் செயல்களின் இன்பம்
சொல்லிய பின் கிடைக்குமா !!!!