பெண்
கருவறையில் சுமந்து
பெற்றெடுத்தாள் ஒரு பெண்.
வகுப்பறையில் மதிப்பெண்
பெற வைத்தாள் ஒரு பெண்
தோளுக்கு நிகர் நின்று
தோழமை தந்தாள் ஒரு பெண்
உடன் பிறந்து எனக்கு
உணவூட்டினாள் ஒரு பெண்
உடல் கலந்து எந்தன்
உயிர்ப்பிரதி தந்தாள் ஒரு பெண்
எத்தனை வேலையுண்டு வீட்டில்
அத்தனையும் செய்தாள்..
இத்தனை வேலையும் முடித்து
அலுவலகமும் சென்றாள்..
கள்ளிப்பால் இன்று
விற்பனைக்கில்லை..
கற்றவள் இன்று
சரஸ்வதி மட்டுமில்லை..
அவள் இல்லாத
அலுவலகங்கள் இல்லை..
வலிமை என்பது
ஆண் உடலில் மட்டுமில்லை..
காலங்கள் கடந்தாள்
சங்கிலிகள் உடைத்தாள்
சமையல்கட்டின் படி தாண்டி
சாதனைகள் படைத்தாள்
வாழ்வு தந்த அன்னைக்கும்
வாழ்வில் வந்த பெண்களுக்கும்
வாழ்த்து சொல்கிறேன்
வணங்கியே...