விஞ்ஞான வசதியில்லாமல்
செயற்கை கோள்கள்
செலுத்தியாயிற்று
ஊர்கள் தோறும்
செல்கோபுரங்கள் நிறுவியாயிற்று
கண்ணாடி இழை கேபிள்கள்
வித விதமான கைப்பேசிகள்
தொலை தொடர்பில்
கண்டங்களை இணைத்து
சாதித்துக் காட்டி விட்டோம் !
ஆயினும்
முதியோர் இல்லத்தில்
ஏங்கி கிடக்கும் பெற்றோர்
அடுக்களையில் களைத்து போய்
உழைத்துக் கொண்டிருக்கும் மனைவி
அடுத்த அறையில்
வீடியோ கேம்மில் பொழுது போக்கும் குழந்தை
இவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு கொள்ள விஞ்ஞான வசதியில்லாமல்
ஓரிரு வார்த்தை பேசக்கூட நேரமில்லாமல்
தவித்த படி
தொலைக்காட்சி பார்த்து செய்தி தாள் படித்து
குட்டி தூக்கம் போட்டு
ஞாயிற்றுக் கிழமைகளை கடத்தும்
சராசரி மனிதருள்
நானும் ஒருவன் !

