பெண்மை வாழ்க
பெண்ணில்லாத வாழ்வு
பொன்னானது என்பவருண்டு
மண்ணாகும் வாழ்வை - பொன்
செய்வாள் பெண்
பெண்
பல் வேடம் பூணும் பொக்கிஷம்
அவளின்றி வாழ்தல் கக்கிசம்
இமயம் போல சுமை வந்தாலும்
அவள் மடியில் தலை சாய்க்க
இமை மூடும்... சுமை தீரும்...
சிற்றின்பம் கொண்டு
மாதங்கள் பத்து தவமிருந்து
பெரும் வலியை - தன்
சிறு வழியில் நிறுத்தி
தன்னுள் உதித்த உயிரை
பிரசவிக்க பெண் படும்பாடு
நாம் காணும் உலகின் சிரமங்களின்
முன்னே நிச்சயம் பெரிது
உலகில் பெண்மை அதிகம்
பெண்ணில் தான் பாசம் அதிகம்
வேஷம் பூணும் உலகம் இன்று
பெண்ணை இகழ்கிறது
நிச்சயம் இகழும் நிலையில்
பெண்மை இல்லை...
***