கெரகம் புடிச்ச
( ஆபிசர் "மனோபாலா", வும் "கோவைசரளாவும்" பேசுவதாக கற்பனை செய்து கொண்டால் "சரி"யாக இருக்கும்.)
************************************************************************************
ஆபிசர் : உங்க வீட்டுக்காரர் பேரு என்னம்மா?
பெண் : அய்யோ, அவரு பேரை எப்படி சொல்றதுங்க! அந்த மலை மேல இருக்கிற சாமி பேருங்க.....
ஆபிசர் : திருப்பதி சாமியா, பழனி சாமியா?
பெண் : பழனில இருக்கற சாமிங்கோ!
ஆபிசர் : பழனிச்சாமியா?
பெண் : இன்னொரு பேருங்கோ....
ஆபிசர் : சண்முகம்....சுப்ரமணி..... முருகன்......
பெண் : இரண்டாவது சொன்னீங்களே அந்த பேருங்கோ...
ஆபிசர் : சுப்பிரமணி..... தானே!
பெண் : ஆமாமுங்கோ....அதுதானுங்கோ அந்த கெரகம் புடிச்ச
நாயோட பேரு........!
ஆபிசர் : ?@#$%$%@!#$#$%@$%@$%^%^&& கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......!
-மீள் பதிவு. ( என்னய்யா...மீள்...மீள்....ஒன்னும் தோணலைன்னு போடு!)