நீங்கள் அதற்கு சரிபட்டு வருவீர்களா

நாம் குருவைதேட வேண்டியதில்லை.
சீடன் தகுதியாக இருக்கும் போது, குரு தேடி வருவார்.

அப்படியானால் நாம் ஏன் குருவை காண முடியவில்லை என்றால், நாம் அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளவில்லை,

நாம் தயாராகவில்லை என்பதே அதன் காரணம்.

நீங்கள் உண்மையிலேயே,தாகம் உடையவராக இருந்தால்,உங்கள் மனதின் ஆசையாக இல்லாமல்,உங்கள் உயிரின் தாகமாக அது இருந்தால்,உங்களிடம் இறைவனுக்காக அர்பணிப்பும்,சரணாகதியும் இணைந்தால்,இறைவனே குரு உருவில் உங்கள் முன் வருவார்.எனவே தயாராவதே சீடனின் முதல் வேலை.நீங்கள் தயாரா?

அதற்கு முன் நீங்கள் தயாராக போக வேண்டிய உங்களுக்குகான பாதையை, நீங்கள் எதற்கு சரிபட்டு வருவீர்கள் என்பதை கண்டுபிடித்து விட்டு (பக்தி,கர்ம,யோக,ஞான,சேவை,சித்தமார்க்கம்) உங்களுக்குக்கான பாதையை தேர்ந்து எடுங்கள்?

உங்களுக்கான பாதையில் பயணிக்க உங்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் நீங்கள் குருவை அடைய உதவுவதே ஜீவசித்தர்கள் குருகுலத்தின் நோக்கம்.

அனைவருக்கும் குருவாக ஒருவரே இருக்கும் வாய்ப்பை இறைவன் எவருக்கும் வழங்க வில்லை

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (9-Mar-16, 9:01 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 174

மேலே