உன் மென் பாதங்கள் - ஹைக்கூ
மஞ்சள் நிலவு
வானத்தில் பவனி
ஒளிசிந்தும் மாளிகை!
நட்சத்திரங்கள் இல்லா இரவு
மின்னும் நட்சத்திரங்களாய்
உன் இரு கண்கள்!
கனவுகள் இல்லா உறக்கம்
இனிய குரலில் கேட்கும்
உன் குயிலோசை!
அன்னம் இல்லா தடாகக் கரை
காற்றில் நடைபயிலும்
உன் மென் பாதங்கள்!