நான் ஸ்ரீலஸ்ரீ எழிலானந்தா ஆவது உங்கள் முடிவில்
நான் ஸ்ரீலஸ்ரீ எழிலானந்தா ஆவது உங்கள் முடிவில்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மிகக் குறந்த மதிப்பெண் பெற்ற என்னை
ஏனப்பா ஆள்அரமில்லா பகுதியொன்றில் இருக்கும்
தனியார் பொறியியல் கல்லூரியொன்றில்
அதிகப் பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்
சேர்த்து நான்கு ஆண்டுகள் லட்சக் கணக்கில் செல்வழித்தீர்கள்?
கணிதவியல் பாடத்தில் நான் பெற்ற 60% மதிப்பெண்
தாத்தா காலத்து 20% மதிப்பெண்ணுக்கும் சமமில்லையாம்.
@@@@
நாண்காண்டுகள் உருண்டோட நானும் எப்படியொ
உருண்டும் புரண்டும் காப்பியடித்தும் தேர்ச்சி பெற்று
இன்று ஏட்டுச் சுரைக்காய்ப் பொறியியல் பட்டதாரியானேன்.
என் அறிவுத் திறனையும் ஆங்கில அறிவையும் பார்த்து
வளாக நேர்காணலில் என்னை ஒதுக்கி ஓரங்கட்டித் தள்ளிவிட்டார்கள்
@@
எந்தப் போட்டித் தேர்விலும் என்னால் என்றுமே
வெற்றி பெறாத இயலாத நிலையில் உள்ளேன்.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை
உழைப்பில்லாத் தேர்ச்சி; அதன் பின்னே தராளமயமாக்களினால்
கல்வித் தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மனப்பாடக் கல்விக்கு
மதிப்பெண்களை வாரி வாரி வீசியடிக்கும் வள்ளலினம்.
@@@@
அடிப்படையே தெரியாதவனுக்கும் 60% எளிதில் கிட்டும்
சமையல் கலைப்படிப்பில் எனைச் சேர்த்திருந்தால் கூட
உருப்பட்டு இருப்பேனே எனதருமைப் பெற்றோரே!
ஊராரைப் பார்த்து வறட்டுக் கவுரவத்தில் என்னைப்
பொறியியல் படிப்பில் தரமில்லா மாணவனை
தரமில்லா கல்லூரியில் அதிகப் பணம் கட்டிச் சேர்த்து
என் வாழ்க்கையையே நாசமாக்கி விட்டீர்களா நியாமா சொல்லுங்கள்?
@@
சிறு வயது முதலே அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து
ஆர்வத்தால் சமைக்கக் கற்று நல்ல கைப்பக்குவம் பெற்றுள்ளேன்
வேலையில் இருக்கும் பெண்ணொருத்தியைப் பார்த்து
எனக்கு மணமுடித்து வையுங்கள் எனதருமைப் பெற்றோரே!
@@
சமையலையும் பிற வீட்டு வேலைகளையும்
அவள் குறை சொல்லா விதத்தில் அவள் மெச்சும்
இல்லத்தரசனாய் குடும்பப் பாங்காய் இருந்து
என்றென்றும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து காட்டுவேன்.
இதற்கு நீங்கள் உடன்பட்டால் ஒரு செல்பேசி அழைப்பில்
ஓடோடி வருவேன் நம்மில்லம் நோக்கி,
@#
இளம் பொறியியல் படிப்பில்குறைந்த மதிப்பெண் பெற்ற என்னை
அதிகப் பணம் கட்டி ஏதாவது ஒரு கல்லூரியில்
எம்.டெக்-கில் சேர்த்து பணத்தை விரயம் செய்யாதீர்
@@
எப்படியாவது எம்.டெக்-கில் தேர்ச்சி பெறவைத்தாலும்
தராமில்லாப் பொறியியல் கல்லூரி ஒன்றில்
பணம் கட்டித்தான் என்னை வேலைக்குச் சேர்ப்பீர்கள்
ஏனெனில் வேறுவேலைக்குச் செல்லும் தகுதி
அடிப்படைக் கல்வியே சறுக்கலான எனக்கு இல்லவே இல்லை.
@@
என்னைப் போன்றவர்கள் பொறியியல் பேராசிரியர்கள் ஆனால்
பொறியியல் கல்வியின் தரமும் பாதாளம் போய்விடும்.
காலத்தை வென்று நிற்கும் அந்தப் பாவத்தைச் செய்ய
என்னைப் பலிகிடா ஆக்காதீர் எனதருமைப் பெற்றோரே!
@@
அந்த எண்ணம் உமக்கிருந்தால் என்னை அடியோடு மறந்துவிடுங்கள்
@@
நாட்டில் எத்தனையோ ஆனந்தாக்கள் நடமாடி வருகிறார்கள்
அவர்களில் ஒருவரிடம் சீடனாய்ச் சேர்ந்து பணிவிடைசெய்து
நல்லபடியாய் வாழ்ந்து காட்டவே முடிவெடுத்துவிட்டேன்,
நான் உறையும் ஆசிரமத்தைக் கண்டறிந்து
எனைத் தேடி நீங்கள் வந்தால் உங்களை அன்போடு
ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்து வழியனுப்பி வைப்பேன்.
--
இப்படிக்கு
ஏட்டுச் சுரைக்காய் பொறியியல் பட்டம் பெற்ற
தவமிருந்து நீங்கள் பெற்ற ஒரே மகன் எழிலரசன்
(நான் ஸ்ரீலஸ்ரீ எழிலானந்தா ஆவதும் ஆகாததும் உங்கள் முடிவில்)

