பக்ரி - கண்யா

டேய் முருகா, நா எம் பேர மாத்திக்கப் போறேன்.

@@@
ஏண்டா திடீர்னு உனக்கு இந்த ஆசை?
@@@
ஏண்டா நாடறிஞ்ச பிரபலங்களே பேரை மாத்திக்க ஆசைப்படறபோது நா ஆசைப்பட்டா தப்பா?
@@##
அதுக்கு என்னடா காரணம்?
@@@
தகுந்த காரணம் இருக்குதடா. பெங்களூர் பிரபல தொழில் அதிபர் நடுத்தர வயது ஆகவரைக்கும் விஜய மல்லையா - வாக இருந்தார்
வட இந்தியத் தொடர்பால் இப்போ விஜய் மல்யா ஆகிட்டார்
இந்திப் படத்திலே நடிச்சபோது கமலஹாசன் கமல்ஹாசன் ஆனார்; அரவிந்த சாமி அர்விந்த்சாமி -யானார்.
@@@@@
உம் பேரு பக்கிரி பரமசிவம். அதை எப்படி மாத்தப் போற?
@@@
அதென்னடா பெரிய விசயமா? பக்கரி பரமசிவம் பக்ரி பர்மசிவ் ஆகப் போறேன். ஹெச்.சி.எல் தொழில் அதிபர் சிவநாடார் சிவ்நாடார் ஆன மாதிரி.
#@@@
சரி உங்கப்பா பேரு தம்பிங்க பேரையுமா மாத்தப் போறையா?

@#%
ஆமாண்டா அதிலென்னடா சந்தேகம். என் அப்பா மூக்கயா மூக்யா ஆவார். பெரிய தமபி கருப்பய்யா கர்ப்பய் ஆவான். சின்னத் தம்பி கண்ணைய்யா கண்யா ஆவான். இந்தப் பெயர் மாற்றத்திற்கு கமல், அர்விந்த்சாமி , விஜய் மல்யா ஆகியோருக்குத் தான் நன்றி சொல்லணும்.

####%
சரிடா பக்ரி பர்மசிவ்

எழுதியவர் : மலர் (10-Mar-16, 1:01 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 190

மேலே