சில கவித் துளிகள்- 4

அடிக்கவில்லை திட்டவில்லை
ஆனாலும் அழுகின்றான்
- மழை

மாணவன் சீவிய பென்சிலால்
வரையப்பட்டது
- சிற்பி செதுக்கிய பெண்சிலை

ஏற்றம் மட்டுமே
இறக்கம் இல்லை
- விலைவாசி

கண்களே ஆயுதம்
பாதிக்கப்படுவது இதயம்
- காதல்

கல்லிலே பூ படைத்தான்
கருக்கப்படுகிறது பூவாகிய பூவை
- வரதட்சணை கொடுமை

ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதி இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது
- ஜாதிமல்லியில்

பல வண்ணங்கள் கையில்
மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்பு மனதில்
- ஆணா....? பெண்ணா.....?

பிறப்பும் இல்லை
இறப்பும் இல்லை
- காற்று

பல்லில்லா சிறு குழந்தை
தளர் நடை போடுகின்றது
- முதியோர் இல்லத்தில்

பெற்றோரை எதிர்த்தேன்
காதலனை நம்பினேன்
- நடுதெருவில் நான் குழந்தையுடன்

எழுதியவர் : நித்யஸ்ரீ (10-Mar-16, 2:10 pm)
பார்வை : 141

மேலே