இறுமாப்புக் குழாய்கள்-சுஜய் ரகு
பிரதான குடியிருப்புச் சாலைகளில்
குடங்கள் தவங்கிடக்கின்றன
வெயில் மழை பாராமல்
கொத்துக் கொத்தாகக் காத்துக் கிடக்கின்றன
பெரும்பாலும் மௌனித்தே கிடக்கும்
குழாய் அவ்வப்போது காது திருகும்
கைகளால் மூச்சிட்டு அடங்கும்
தன்னிலமர்ந்து பெருமூச்சிடும்
பறவைகள் மீது தூசித்துகள் படர்த்தும்
சாலை வசிப்பு நாய்கள் சங்கிலித் தொடராய்
வந்து ஈரப் படித்திவிட்டு ஓடும்
அனல் வளையமாய்ச் சூழும்
ஏரியா வாசிகளின் ஏக்க பார்வைகள்
இத்துணைக்குப் பிறகும் இறுமாப்புக்
குறையவில்லை குழாய்களுக்கு
இரவில் நிலா தேடும் ஓர் நிறைகுடம்
தன் வசப்பட்டிருப்பதால்.......!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
