ருத்ராவின் குறும்பாக்கள்13
ருத்ராவின் குறும்பாக்கள்(13)
=========================================ருத்ரா இ.பரமசிவன்
நாம் முதலில் இங்கு வந்து
விழுவதற்கு முன்னரே இங்கு விழுந்த
நம் நிழல்.
கடவுள்
____________________________________________
அச்சம் தந்த ஊதுவத்தியை அணைக்க
நாம் வளர்த்துக்கொண்ட
நம் சுடுகாட்டுத்தீ
மதம்
______________________________________________
குரல்கள் எனும் வேதத்துக்கும்
முந்தி இருந்த அந்த
குரல்வளையைத்தேடு
நாத்திகம்
_________________________________________________
அகராதியின் முதல் பக்கத்தை
புரட்டும்போதே அடியில்
கரப்பான் பூச்சியாய் நசுங்கிக்கிடப்பது!
வாழ்க்கை
__________________________________________________
கொஞ்சம் பொறு என்
கல்லறைக்கு நானே வர்ணம் பூசியபின்
வந்து விழுகின்றேன்.
நேரமில்லை
_____________________________________________________
ஒரு ரோஜாப்பூவை வைத்துக்கொண்டே
சஹாராவின் மணல் துளிகளையெல்லாம்
மகரந்தங்கள் ஆக்குவது.
காதல்
____________________________________________________
இருபத்தினாலுமணி நேரத்தையும்
ரோஜா இதழாய் பிய்ச்சு பிய்ச்சுத் தின்று
அவளுக்கு காத்துக்கொண்டிருப்பது.
அவன்
___________________________________________________
அவனுக்கு காத்திருந்து உடலில்
ஊர்ந்து ஊர்ந்து மெகந்தி ஆகும்
பட்டாம்பூச்சிகளின் பெருங்காடே
அவள்
_________________________________________________