மேக்கப் போடாம செல்ஃபி

"டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க" படபடப்புடன் ஃபோன் செய்தான், கௌதம்.
"ஏன்? என்னாச்சு?" என்று கேள்வி கேட்ட டாக்டரிடம், "தெரியல டாக்டர், திடீர்னு மயக்கமாயிட்டாங்க" என்று படபடப்புடன் பொய் சொன்னான்.
"சரி. நான் ஆம்புலன்ஸ அனுப்பறேன். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் டாக்டர்.
இவன் கலக்கத்துடனும், படபடப்புடனும் மயங்கிக் கிடந்த மனைவி கீதாவையும், பக்கத்தில் கிடந்த மொபைலையும் பார்த்தான். வேக வேகமாக அதை எடுத்து ஒளித்து வைத்து விட்டான்.
ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்தது.
அது வந்தவுடன்தான், பக்கத்து வீட்டிற்கெல்லாம் தெரியவந்தது.
எல்லோரும் என்னவென்று கேட்க, அனைவரிடமும், "தெரியவில்லை" என்றே சொன்னான்.
"கீதாவின் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டீங்களா, கௌதம்" பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்.
"இல்லை. .... சொல்ல வேண்டாம்" என்று அவசர அவசரமாகச் சொல்லி விட்டு, ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.
சந்தேகம் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், கீதாவின் பெற்றோருக்குத் தகவல் சொன்னார்.
சந்தேகம் கொண்ட பெற்றோர், இன்ஸ்பெக்டராக இருக்கும் தன் சொந்தக்காரரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்கள்.
டாக்டரிடம் என்ன என்று கேட்டார்கள்.
"ரொம்ப மிஸ்ட்ரியா இருக்கு. என்ன ஏதுன்னு கேட்டா, தெரியல, தெரியலனே சொல்லிட்டு இருக்கார், உங்க மாப்பிள்ளை."
பெற்றோர் இன்ஸ்பெக்டரைப் பார்த்தனர். அர்த்தம் புரிந்து கொண்ட இனஸ்பெக்டர், கௌதமின் தோளில் கை போட்டபடி "கேண்டீன் போலாமா?" என்று கேட்டபடி கௌதமைத் தள்ளிக் கொண்டு போனார்.
ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து, அவனுக்கு ஒன்று கொடுத்து நிலைமையை சகஜமாக்கினார்.
"என்ன ஆச்சு, கௌதம்"
மெல்ல தன் பாக்கெட்டில் இருந்து கீதாவுடைய மொபைலை எடுத்துக் கொடுத்தான்.
கேலரியைத் திறந்து பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ந்தார்.
"நான் எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னேன் சார்...... மேக்கப் போடாம செல்ஃபி எடுத்துப் பார்க்காதேன்னு.... கேட்டாளா... எடுத்துப் பார்த்தா. மயங்கிட்டா.."

எழுதியவர் : முகநூல் (12-Mar-16, 5:37 pm)
பார்வை : 113

மேலே