யட்சினி பூஜை - தொடர் -பாகம் 3 பலவீன மனதுள்ளோர் எச்சரிக்கையாகப் படிக்கவும்
................................................................................................................................................................................................
முன்கதைச் சுருக்கம்:
செல்வியின் குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்கிறான் கோடங்கி மாசானம். செல்வியை ஏமாற்றி குழந்தையையும் வாங்கி விடுகிறான்.
...............................................................................................................................................................................................
..............................பாழடைந்த கருங்கல் மண்டபத்தில் கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்திருந்தான் மாசானம். மதியம் இரண்டு மணி வெயில் எந்த ஜீவராசியையும் வெளியே தலை காட்ட விடவில்லை.
..............................மாசானத்தின் வசிப்பிடம் இதுதான். சில மாதங்களுக்கு முன் இன்னொரு குடுகுடுப்பைக் காரனும் இங்கு தங்கியிருந்தான்.. பிற்பாடு அவனைக் காணவில்லை...
.............................மண்டபத்தின் உட்புறம் வெவ்வேறு அளவுகளில் மண்டையோடு, மை, பூஜைப் பொருள்கள், தலைமுடி, பெண்களின் உள்ளாடைகள், ரத்தக் கறைப்பட்ட துணிகள், ஸ்டவ், சில பாத்திரங்கள், துணிமணிகள், ஒரு பெட்டி, ஒரு தோல் பை இத்யாதிகள் நிறைந்திருந்தன.
.............................மேல்தானிப்பட்டில் மாசானத்துக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது.. அதில் சுளையாக இரண்டு லட்சம் இப்போது...!
.............................மாந்த்ரீகன் உபாசனையில் தவறிழைத்து விட்டால் அவன் உயிர் தப்ப முடியாது.. என்றோ ஒரு நாள் நரபலி விசயம் வெளியே கசிந்தால் போலிஸ் தண்டிக்கப் போவதும் அவனைத்தான். குப்புராஜனை அல்ல.. அப்படியிருக்க இந்தத் தொகை அவன் கணக்கில் இருப்பது நல்லதுதான். என்ன, பிழைக்கத் தெரியாத அப்பாவி செல்வி..! உண்மையில் அவள் பவித்திரம் மாசானத்தையே கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்தது.
............................நாளை ராத்திரிதான் அமாவாசை.. அமாவாசையில்தான் பூஜை போட்டு நரபலி கொடுக்க வேண்டும்.. நாளை இரவு நடுநிசி வரை சுடுகாடுகளில் மனித நடமாட்டம் இருந்த வண்ணமிருக்கும்.. ஆனால் காலியிடத்தில் யாரும் வரமாட்டார்கள்.. குழந்தையை பலியிடப் போவது அந்த காலி இடத்தில்தான்.. குழந்தை கொஞ்சம் நோஞ்சான்தான்.. குழந்தையை பஞ்சவர்ணத்திடம் கொடுத்து வைத்திருந்தான் மாசானம்.. இந்த பஞ்சவர்ணம் என்பவள் மாசானத்துக்கு ஒரு விதத்தில் கடன்பட்டவள்..
.................................பஞ்சவர்ணத்துக்கும் அவள் புருசனுக்கும் கல்யாணமாகி அஞ்சு வருசமாகியும் பஞ்சவர்ணம் தாயாகவில்லை. அவள் புருசனுக்கு இரண்டாம் கல்யாணம் செய்ய முடிவானபோது பஞ்சவர்ணம் பதறப் பதற ஓடி வந்தது மாசானத்திடம்தான். மாசானம் செய்த பூஜைகளின் பலனாக அவள் கருவுற்றாள்..! அவள் பையன் மாசானத்திடம் நலம் விசாரிக்கிற அளவு நன்றாகவே ஒட்டுவான்..! பின்னே, தந்தையிடம் மகன் ஒட்டிக் கொள்ள மாட்டானா என்ன?
சரி, சரி.. பிற்போக்குத்தனமான சமூகத்தில் பிரசினைகளும் பிற்போக்குத்தனமாகவே தீர்க்கப் படுகின்றன..!
.............................இந்தக் காரணத்துக்காகவே பஞ்சவர்ணத்துக்கு மாசானத்திடம் பயம் எழுபது சதவீதம், விசுவாசம் இருபது சதவீதம், ஒரு வகைப்பட்ட ஈர்ப்பு பத்து சதவீதம் என்று வியாபித்திருந்தது.. ! இப்படி ஆடு கோழி என்று மாசானம் கொண்டு வந்து கொடுப்பான்..! “ சொந்தக்காரங்க விட்டுட்டு போயிருக்காங்க.. திரும்ப வந்து வாங்கிக்குவாங்க.. ” என்று புருசனிடம் சொல்லி வைப்பாள் பஞ்சவர்ணம்.. விட்டுட்டுப் போன ஆடுகள் என்ன ஆகுமென்று பஞ்சவர்ணம் அறிவாள்.. இந்த முறை குழந்தை..!
பஞ்சவர்ணத்தின் கண்களில் பயம் தெரிந்ததால் மாசானம் சில பச்சை நோட்டுக்களை அழுத்தினான்.. “ பெரிய இடத்து விவகாரம்..! மூச்சு விடக் கூடாது..! ”
................................வடுவூரில் மாசானத்தின் அண்ணன் மகள் வசிக்கிறாள்.. மாசானத்தின் ஒரே சொந்தம்.. சித்தப்பா.. சித்தப்பா என்று பிரியமாக இருப்பாள்.. யட்சினியை அமைதிப் படுத்தி விட்டு அவளிடம் போய் விட வேண்டியதுதான்.. அவன் பரம்பரைக்கு பாத்தியப்பட்ட கோயில் ஒன்றிருக்கிறது.. அதைச் செப்பனிட்டு பூசாரியாகி விட வேண்டியதுதான்.. குடுகுடுப்பைக் காரனுக்கு பூசாரி கௌரதைதான்...
எதிர்காலம் பற்றி பல்வேறு யோசனைகளில் லயித்திருந்தான் மாசானம்..
யாரோ அவனை உலுக்கினார்கள்.. கண் திறந்து பார்த்தால் செல்வி..! ! !
“ என்னம்மா இந்த பக்கம்? ” சட்டென்று எழுந்தான் மாசானம்..
செல்வி மண்டபத்துக்கு வெளியே நின்றிருந்தாள்.. பக்கத்தில் யாருமில்லை...! ! ! !
பின்னே உலுக்கியது ? ? ?
சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்து, நிமிர்ந்தபோது....
யம்மாடியோவ்... செல்வியின் பிரம்ம்ம்....மாண்டமான முகம் அவன் கண் முன்..! செல்விக்கு கண்ணாடிக் கண்கள்..! ! !
உடம்பெங்கும் மின்சாரம் போல் ஒன்று பாய, பதறி எழுந்தான் மாசானம். முழுதும் வேர்த்தது..! ! ! பிரமையா, நிஜமா எனத் தெரியாத குழப்பம்..! ! !
கொஞ்சம் விபூதி இட்டுக் கொண்டு திரும்ப படுத்தான்..
திரும்ப உலுக்கப்பட்டான்..! !
“ ஐயையைய்யோ... ” அலறி அடித்து எழுந்தவன் முன் குப்புராஜனின் வேலைக்காரன்..!
“ ஒன்னை அய்யா வரச் சொன்னாரு... ” வேலைக்காரன் அறிவித்தான்.
குப்புராஜனின் பங்களா..
பின்பக்க வழியாக முக்காடு போட்டு உள்ளே வந்த மாசானம், குறுக்கும் மறுக்கும் உலவிக் கொண்டிருந்த குப்புராஜனை கவலையோடு கவனித்தான்.. என்ன நடந்தது ? ?
“ வாய்யா.. வாய்யா.. வாய்யா.. ” குப்புராஜன் படபடத்தான். “ எல்லாம் வீட்டம்மாதான்.. கண்ணாடி பாத்தா முகத்துல ரெண்டு கண்ணு தெரியுதுங்கறா..! ”
“அய்யா.. ரெண்டு கண்ணுதானே தெரியும்? ”
“ நீ வேறய்யா..! நெத்தியில ஒண்ணு, தாவாங்கட்டையில ஒண்ணு தெரியுதுங்கறா..! ! ! அவ முகத்துக்குப் பதிலா வேற முகம் தெரியுதுங்கறா.. நேத்து ராத்திரியில இருந்து இந்தக் கூத்து.. ஆன மேனிக்கு நல்லாப் பேசறா.. திடீர்னு கண்டபடி உளர்றா.! ! என்னன்னு பாரு..!! ! ”
“ ஐயையோ, வீட்டம்மா உடம்புல யட்சினி வந்துடுச்சோ? அதுக்குத்தா தாறுமாறா ஒடம்பிருக்கும்.. ! ! ! ”
தனக்குள் சொல்லிக்கொண்ட மாசானம் தியேட்டரம்மாவை பார்த்தான்..
தாட்டியாய், ஒற்றைக் கல் மூக்குத்தியில் மின்னினாள் தியேட்டரம்மாள்.. முதலில் சாதாரணமாய் மாசானத்தைப் பார்த்தவள், பிறகு உதடு கோணி “ உய்ய்...ஊ..ஊ.. ” என்றாள்..
மாசானம் வேப்பிலையால் அடித்து, “ நீ யாரும்மா ” என்றான்..
“ நீயே சொல்லேண்டா நா யாருன்னு? ”
“ மொக்கைசாமி வித்த எடத்தோட யட்சினிதானே? ”
“ தெரிஞ்சுகிட்டே ஏண்டா கேக்குற? ”
“ என்ன வேணும் தாயி? ”
“ ஒனக்குத் தெரியாதா என்ன வேணுமின்னு? ”
“ நாளை ராத்திரி வரைக்கும் பொறுத்திரு தாயி.. தலைச்சன் புள்ளய பலி கொடுத்துர்றேன்..! ”
“ என்னோட பலிய நாந்தான் தூக்கிட்டு வருவேன்..! ”
“ தாயி.. அது.. ”
“ ஒரு குழி வெட்டு.. பலிய நானே தூக்கிட்டு வந்து குழியில போடறேன்.. நானே மூடிட்டு அப்படியே குழிக்குள்ள போயிடறேன்..! அப்புறம் இவ உடம்புல வர மாட்டேன்..! ! ”
“ அ.. அ.. அப்படியே தாயி... ”
“ வேற வழியில்லேய்யா.. ” குப்புராஜனிடம் தெரிவித்தான் மாசானம்.. “ புள்ளய அது கைல கொடுத்துதான் ஆகணும்..! இதுக்கு ஏய்யா கவலைப்படுறீக? கேக்கறது உங்க சம்சாரமில்லே.. யட்சினி..! அல்லாத்தையும் நா பாத்துக்கறேன்..! ! ”
......................................பொட்டல் காட்டில் அஸ்திவாரம் பக்கத்தில் குழியெடுத்து, ஒரு விரற்கடை உயரத்துக்கு பூப்போட்டு வைத்திருந்தான் மாசானம். கொத்து ஊதுபத்தி வாசம் பரப்பியது. ஒற்றை அரிக்கேன் விளக்கை ஆச்சரியத்தோடு முகர்ந்து விட்டு “லொள் லொள்” என்று குரைத்தது நாயொன்று.
குப்புராஜன் டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்..
பத்தடி தள்ளி “ ஹ் ஹூம்.. ” என்று முனகியபடி தியேட்டரம்மாள்.. அவள் கையில் துணி மொந்தையில் குழந்தை..!
குழிப் பக்கம் அவள் வந்ததும் நாலா பக்கம் சுற்றிப் பார்த்தாள்.. விளக்கு வெளிச்சத்தை குறைத்தாள்.. மாசானத்தையும் குப்புராஜனையும் அடிக்காத குறையாக !தூர விரட்டினாள்..!
சற்று நேரத்தில் “ வியார் வியார் ” என்ற குழந்தையின் அழுகுரல் எதிரொலித்து அடங்கியது..! ! ! !
குப்புராஜனும், மாசானமும் ஓடிவந்து பார்த்தபோது மூடப்பட்ட குழியருகில் மயங்கிக் கிடந்தாள் தியேட்டரம்மா..! ! !
தொடரும்
.................................................................................................................................................................................................