ஞான மரம்

போதி மரம் போதிக்கவில்லை
புத்தனுக்கு ஞானம்
அவன் தேடிய ஞானம்
போதிக்கும் புகழைத் தந்தது !

எந்த மரத்தின் கீழ் அமர்ந்தாய்
என்பது முக்கியமல்ல
தவ நிலையில் ஞான மரம்
கபால ஓட்டிற்குள் தழைக்கும்
தத்துவமாய் ..
மேலே
ஆலோ வேலோ அரசோ
வாகையோ பூவரசோ
மரம் எதுவாய் இருந்தால் என்ன ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-16, 7:36 am)
Tanglish : gnaana maram
பார்வை : 154

மேலே