வாய்ச் சொல் வீரனடி அவன்

வாய்ச் சொல் வீரனடி அவன்
சொல் ஒன்று இன்றைக்கு
மற்றோன்று நாளைக்கு!

வாய் வீச்சு நீளமே அவனுக்கு
அளக்க முடியாத அளவிலே
போகப் போக நீளம் கூடவே!

வாய் பேச்சு ஆணவமே அவனுடைய
அதிகாரம் விஞ்சும் மிகவே
அர்த்தமில்லாத அடங்காப் போக்கே!


வாய்க் கட்டு தேவையே அவன் பால்
சொல்லுக்கு மதிப்பு காணுமே
கட்டுப்பாடு பேச்சிலே அவசியமே!


ஒரு சொல் போதுமே அவனறிய
நயமே உரைத்தல் நன்மையே
மாறாது இருப்பது பெருமையே!

சொன்ன சொல் மாறாதவன் அவன் என்று
சொல்படி நடப்பவன்
என்றறியப்படுவது பேரின்பமே!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (14-Mar-16, 8:44 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 263

மேலே