காத்திரு
கடைசிவரை உடன் வருவதாக சொல்லிவிட்டு
கல்யாணம் வரை கூட வராமல் போனாயடி.
புள்ளிமான் தேகம்மின்று புகைப்படமாய் ஆனதய்யோ,
வெள்ளிவானின் மின்மினிப்பூச்சி ஒன்று விறகுகளால் போசுங்கியதே,
விண்ணும் மண்ணும் முட்டிவந்து துறுதுருப்பாய் விளையாட்டுக்காட்டி.....
இன்று நிரந்தரமாய் சென்றுவிட்டாள் சிகைகுள்ளே தங்கிவிட்டாள்.
ஒருவார்த்தை சொல்லியிருதல் ஓடோடி வடிருப்பேன்
சொல்லாமல் சென்றதேனோ.
சொல்லடி..........
என்னகோபம் என்மீது...
சத்தியமாய் விடையறியேன் ...
நிச்சயமாய் விடைஅறிவேன்... உன்னை பின்தொடர்ந்து
நட்சத்திரங்கள் இல்லவானம் ..... மயானம்
நீயில்லா பூமியிது எனக்குமட்டும் சுடுகாடு
சொன்னேனே மறந்தாயோ...சாவிலும் உடன்வருவேன்...
சிக்கிரமாய் வந்துவிடுவேன்...அஞ்சாமல் காத்திரு ...