எந்தன் மனதில் விட்டுச் சென்றாய்

சென்ற பின்பும் இனிமை கொஞ்சம்
மழையும் தூரலும் விட்டுச் செல்லும்
சென்ற பின்பும் பசுமை கொஞ்சம்
இயற்கையும் தென்றலும் விட்டுச் செல்லும்
சென்ற பின்பும் கவிதை கொஞ்சம்
அழகிய வரிகள் விட்டுச் செல்லும்
சென்ற பின்பும் முழுதாய் உன்னை
எந்தன் மனதில் விட்டுச் சென்றாய்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Mar-16, 11:36 pm)
பார்வை : 453

மேலே