காலம்பூரா காதலிப்போம் வா

செய்கிறாய் கலகம் மனதில்
கொய்கிறாய் என்னை மெல்ல‌
வைகிறாய் பார்க்கும் போதோ
நெய்கிறாய் என்னை ஏனோ
கண்களால் கவிதை எழுதி
கனவிற்குள் அனுப்பி வைப்பேன்
இதயத்தால் படித்து பார்த்து
பதிலெழுதி உடன் அனுப்பு...

நீ எழுதும் பதிலில்தானே
என் வாழ்க்கை இருக்குதடி..
நீ கொடுக்கும் சம்மதமே
என் வாழ்க்கையின் வரமே..
வானவில்லின் ஏழு வர்ணம்
வாழ்வில் தீட்ட வந்திடடி...
வானம்பூரா அன்பால் நிரப்பி
காலம்பூரா காதலிப்போம் வா..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Mar-16, 11:26 pm)
பார்வை : 329

மேலே