காதல் குடித்தேன்
![](https://eluthu.com/images/loading.gif)
அமிர்த மென்று எண்ணியே
காதல் குடித்தேன்..
தேனைப் போல இனிக்கின்ற
கவிதைத் தொடுத்தேன்...
வானம் தொட்டு நிலவினை
எட்டிப் பிடித்தேன்...
கானம் ஒன்று கேட்டிட
என்னை மறந்தேன்...
கானம் பாடியது யாரோ
அது நீயோ..
குயிலாய் கூவியது யாரோ
அது நீயோ...
இன்னிசையை அளித்தது யாரோ
அது நீயோ....
என்னிசையாய் ஆனது யாரோ
அது நீயே!