வலிகள் உனக்கு எப்போதும் வேண்டாம் 555

பெண்ணே...

என் காதலை உன்னிடம்
வெளிப்படுத்தினேன்...

எல்லோரையும் போல் இல்லாமல்
கொஞ்சம் வித்தியாசமாக...

உன்னை மட்டும்
சுவாசிக்கிறேன் என்று...

நீ என்னை காதலிக்க சில
தேர்வுகள் எனக்கு வைத்தாய்...

என் விரல்களை வெட்டிவிட்டு
காவியம் படைக்க சொன்னாய்...

என் இதழ்களை பிரித்துவிட்டு
உன்னை வர்ணிக்க சொன்னாய்...

என் கண்களை கட்டிவிட்டு
ஓவியம் தீட்ட சொன்னாய்...

விழித்துக்கொண்டே
உறங்க சொன்னாய்...

ஏனோ சில தேர்வில் வெற்றி
சில தேர்வில் தோல்வி...

இன்றோ என் காதல் மதில்சுவர்களை
உடைத்துவிட்டு...

உன் திருமணதிற்கு
என்னை அழைக்கிறாய்...

வலிகளை
அனுபவித்தவன் நான்...

அந்த வலிகள் எப்போதும்
உனக்கு வேண்டாம்...

மணமாலை நீ
சூடும் நேரம்...

உன் விழிகள் என்னை
காணவேண்டாம்...

வாழ்க நீ பல்லாண்டு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Mar-16, 9:10 pm)
பார்வை : 1971

மேலே