யாருமற்ற தனிமை
வறண்ட வெயிலில்
என் பயணம் தொடர
துணைக்கு இல்லை நிழலேனும்...
விதி விட்ட வழியில்
எல்லாமே - எனக்கு
சாபங்கள் அன்றி, வரங்களில்லை...
துளி கூட ஒளியில்லை
நான் - வாழ்வில்
துவங்குவதனைத்திலும் தடை தானே...
'நல்லவர்' என்று எனை
சொல்லாதோரில்லை - இங்கே
நடந்ததோ எனக்கு எதுவுமில்லை...
எதிரிகள் என்று யாருமேயில்லை
அன்பை - எனக்கும்
எதிர்பார்பின்றி தர ஒருவருமில்லை...
விரும்பியது என்று ஏதுமில்லை
எனக்காய் - எதுவும்
விரும்பிக் கொடுத்திட யாருமில்லை...
பாசத்துக்கு முன் நானும்
வேசமிடுவதில்லை - ஆயினும்
பரிவு காட்டி பேசிட ஆளேயில்லை...
எனக்கென்று சொல்ல ஒர்
ஜீவனில்லை- ஆகையால்
ஜீவித்து ஜெயிப்பதிலும் ஆசையில்லை...