அழகுக்கு அத்தாட்சி நீ

என் கற்பனையின்
முழு வடிவமாய்
நீ யென் - கண்
முன்னே வந்தாய்...
தடுமாறி தான்
போனேன் - அந்த
ஓர் நொடி நானும்..
கம்பனின் கற்பனை
நிறைவின்றி போகும்
பாரதியின் பாடல்கள்
பாதி தான் பெறும்
கண்ணதாசன் எழுத்து
குறை மதிப்பே காணும்
வைரமுத்து வரிகளும்
வண்ணமிழந்து போகும்
என்று தான் எண்ணினேன்,..
எந்தன் கற்பனையும்
வடிவம் பெறின்!..
மறந்தே போனேன்
இவ் வையகம் - வாழ
வைக்கும் வல்லவன்
திறமை...
அனுப்பி வைத்தான்
உன்னை - எந்தன்
எண்ணங்களின் நாயகனாய்
அவன் உச்ச சாதனைக்கு
ஒட்டுமொத்த அத்தாட்சியாய்!