வா என்னவனே
சொர்க்கம் நான் என்று
உன் வாய்மொழி கேட்க
மெய் சிலிர்க்குதடா
உன் அன்பை கண்டு...
அடம் பிடித்து கேட்கிறாய்
உன் அருகிருக்க
வேண்டுமென்று - மறுத்து
போவதெ ங்கனம்
எனக்கென்றே வாழ்பவனை...
இன்பமும் துன்பமும்
துணை நின்றே
ஜெயிப்போம் - உன்
இனியவளாகிட இந்
நொடி சம்மதம்...
வா என்னவனே,..
உன் விரல் பிடிப்பேன்,
காதலை வித்திட்டே
நாம் வாழ்வை சுவைப்போம்..

