உனக்காய் நானிருப்பேன்

உனக்காக மட்டும்
என் அழைபேசியில்
பிறிதொரு ஓசை...
செவிகளை தீட்டி,
அதையே கைகளோடு
அணைத்து பிடித்து
ஒற்றைக் காலில்
தவம் கிடப்பேன்
நேரம் காலம் அறியாமலே..

நூற்றில் ஒரு வாய்ப்பாய்
உன் அழைப்பு அங்கே,
அந்த நிமிடம்,..
அந்தோர் நாழிகைக்காகவே
அன்றைய பொழுது
புலர்ந்ததென- உள்ளம்
இரகசியமாய் செய்தி அனுப்பும்
எந்தன் உயிருக்கு!

வாடிய பயிருக்கு
வான மழை பொழிந்ததன்ன
என் நாடி நரம்பெல்லாம்
உயிர்த்தெழும் மாயம்
நானோ கண்டதில்லை
வாழ்வின் ஏதொரு நிலையிலும்!

பெரும் சோகம் - எனை
வாட்டினாலும்- சோதியாய்
மின்னும் என் முகம் ,
உந்தன் குறுந்தகவல்
ஒலியாலே ஒளி பெற்று...

வையகத்து வசந்தங்கள்
மொத்தமாய் பக்கம் வந்தாலும்
பாலைவனம் தான் என் வாழ்வு
உன் பாச அழைப்புக்கள்
பார்வை தொடாவிடில்...

பூமியின் இயக்கம்
ஓர் நொடி நிறுத்தம்
விழி ஈர்ப்பே நீ என்
வழி மறந்து போனால்...
ஜீவனில் ஒர் பாதி
மறித்தே போகும்
சுவாசமே நீ என்
அருகின்றி மறைந்தால்...

வார்த்தை மட்டும் கொடு
வாழ்வேன் அன்பே,
உன் நினைவில் நானே..
மூர்ச்சையாகிப் வீழ்வேன்
மூச்சுக்காற்றே - நீ
இன்றி போனால் நானே..!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (15-Mar-16, 11:05 pm)
பார்வை : 1642

மேலே