விழிகள் பேசும்

மொழிகள் தெரிந்தும்
வழிவகைகள் இல்லாமல்
எழும் உணர்வுகளை
மொழிகள் உணர்த்தாவிடின்
விழிப்பு நிலையுடைய
முழுமதி முகத்தின்
விழிகள் பேசும்

மொழிகள் தெரிய வேண்டாம்
சுழலும் எண்ணங்களையும்
பழகிய மனதையறிய
பிழையன்றி தெரியும்
விழிமொழி பேச

- செல்வா

எழுதியவர் : செல்வா (16-Mar-16, 1:19 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : vizhikal pesum
பார்வை : 188

சிறந்த கவிதைகள்

மேலே