நடமாடும் நதிகள் - 40

1*அடுப்பில் பால் பொங்கி வழிகிறது ...
குழந்தை பசி தீர்கிறது .
-வறுமை

2*இரவில் வெளிச்சத்தை அள்ளிகொடுக்கும்
அட்சய பாத்திரம்.
-நிலவு

3*மனிதனின் உதிரத்தில் ஒவ்வொரு அணுவிலும்
மறைந்திருப்பது காதல் (எனும் அர்த்த சாஸ்திரம் ).
-காதல்

4*இரவின் கா(கிதத்தில்)
கவிதையாக தவம் செய்கிறது
-நிலா

5* கார்முகிலின் கண்ணீர் துளிகள்
வெள்ளிமுத்துகளாக இரவில் ஜொலிக்கிறது.
-விண்மீன்

6*மனிதன் ஒருவன்
இறைவனை சந்திக்க போகிறான்
மலர்களெல்லாம் மிதிபடுகின்றன .
-இறப்பு

7*மேகம் மோகம் கொள்கிறது
பூமியின் விதைகள் பிரசவமாகின்றன.
-மழை

8*சில மேகங்கள் சிரிக்கின்றன
பல மேகங்கள் அழுகின்றன .
-மனிதர்கள்

9*சாயங்காலம் சாய்கிறது இரவின் மடியில்
நீலவானம் சாய்கிறது நிலவின் மடியில் .

10*என் இதயம் சுக்கு நூறாக உடைந்தாலும்
அரிசந்திரனாகவே வாழ்கிறேன் .
- கண்ணாடி .



அனைவருக்கும் இதயம் நிறைந்த மனமார்ந்த நன்றி
********************************************************
தொடர் தொகுப்பாசிரியர் :திரு ஜின்னா
முகப்பட வடிவமைப்பு : திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பு : திரு முரளி T N
முகப்பட பெயர் செதுக்கல் : திரு ஆண்டன் பெனி

நான் முதன் முதலில் ஹைக்கூ கவிதை எழுதியுள்ளேன் ...
நான் ஹைக்கூ கவிதை கற்றது நம் தளத்தில் தான் ...
எனக்கு முன்னர் எழுதிய அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் ..
எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னியுங்கள் ..
பிழை இருந்தால் கூறுங்கள் நான் திருத்தி கொள்கிறேன் ..
நன்றிகள் ....

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (16-Mar-16, 12:45 am)
பார்வை : 279

மேலே